search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் கடையில் கொள்ளை"

    அண்ணாசாலையில் செல்போன் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இன்று காலை சதீஷ் வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 10 செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து சதீஷ் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் சென்று கைரேகைகளை பதிவு செய்தனர்.

    செல்போன் கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொடுங்கையூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் கடையில் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள செல்போன், ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery
    பெரம்பூர்:

    வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அருள் பாக்யராஜ். தே.மு.தி.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

    இவர் கொடுங்கையூர் அருகே மூலக்கடை, காந்தி நகர், காமராஜ் சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிதாக செல்போன் கடை திறந்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். இன்று காலை கடையை திறக்க வந்தபோது 2 ‌ஷட்டர்களின் பூட்டு உடைந்து திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் உள்பட அனைத்தையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருந்தனர். மேலும் பணப்பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சமும் சுருட்டப்பட்டு இருந்தது.

    கொள்ளை போன செல்போன்களின் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும். இது குறித்து கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாதி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். #Robbery


    செல்போன் கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் உள்ள மங்கம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் தம்மம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே செல்போன் கடை வைத்துள்ளார்.

    இவர் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலையில் கடையை திறக்க வந்த போது சட்டரில் உள்ள 2 பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் உள்ள 4 விலை உயர்ந்த செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து இளையராஜா வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்போன் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி அருகே நள்ளிரவு ஏணியுடன் வந்து செல்போன் கடையில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெ.1.டோல்கேட்:

    திருச்சியை அடுத்த  சமயபுரத்தை சேர்ந்தவர் ரெங்கபிரபு (வயது 35). அதே பகுதியைச்சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர்கள் இருவரும் சேர்ந்து நெ.1.டோல்கேட் அருகே உள்ள நொச்சியம் டோல்கேட் சாலையில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடையில் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தது.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டி சென்றனர். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அங்கு வந்த `மர்ம' நபர்கள் கடையின் பின்பக்கம் வழியாக சென்று ஏணியை வைத்து கடையின் கூரை மேல் ஏறினர். பின்னர் ஓட்டு கூரையை பிரித்து கடையின் உள்ளே நுழைந்தனர். 

    கடையில்  இருந்த 20 புதிய செல்போன்கள் மற்றும் சர்வீஸ் செய்ய வந்த 25 செல்போன்கள் மற்றும் அங்கு இருந்த செல்போன் சார்ஜர்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றை 2 மூட்டைகளாக கட்டினர். பின்னர் 2 மூட்டைகளுடன் வந்த வழியாக திரும்பி மேலே  ஏறினர். கடையின் முன்பக்கம் வந்து மூட்டைகளை போட்டு விட்டு கீழே குதித்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி சென்ற தொழிலாளர்கள் இதை பார்த்தனர். 

    உடனே அவர்கள் திருடன் திருடன் என சத்தம் போட்டபடி அவர்களை விரட்டி சென்றனர். உடனே 2 மர்ம நபர்களும் 2  மூட்டைகளில் ஒன்றை மட்டும் கீழே போட்டு விட்டு தப்பி யோடினர். மாட்டு வண்டி தொழிலாளர்களும் அவர்களை விரட்டி சென்றனர். ஆனால் பிடிக்க முடியவில்லை. மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்துசென்று கடையை கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டனர். மர்ம நபர்கள் விட்டு சென்ற மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது அதில் செல்போன் சார்ஜர், உதிரி பாகங்கள் மட்டும் இருந்தது. கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை சேகரித்தனர்.

    கடையின் முன்பு சந்தேகத்திற்கு உரிய வகையில் 2 மோட்டார் சைக்கிள் நின்றது. அது கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிளா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சமாகும். நெ.1.டோல்கேட்டில் நள்ளிரவு ஏணியுடன் வந்து செல்போன் கடையில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க போலீசார் ரோந்து நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    ×